Friday 3rd of May 2024 02:19:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா அதிகரிப்பு: ஒன்ராறியோ மாகாணத்தில் மீண்டும் இறுக்கமாகும் கட்டுப்பாடுகள்!

கொரோனா அதிகரிப்பு: ஒன்ராறியோ மாகாணத்தில் மீண்டும் இறுக்கமாகும் கட்டுப்பாடுகள்!


கனடா ஒன்ராறியோ மாகாணம் - ரொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவா பிராந்தியங்களில் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் மூடப்பட்ட உட்புறங்களில் 10 பேரும் திறந்த வெளிப்புறங்களில் 25 பேருக்கும் மேல் ஒன்றுகூட இன்றுமுதல் தடை விதிக்கப்படும் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

புதிய கட்டுப்பாடுகள் உணவகங்கள், திரைப்பட அரங்குகள், விருந்து அரங்குகள் மற்றும் ஜிம்கள் உள்ளிட்ட இடங்களுக்குப் பொருந்தாது எனவும் போர்ட் கூறியுள்ளார்.

புதிய கட்டுப்பாடு்களை மீறி ஆட்களை சட்டவிரோதமாக ஒன்று கூட்டும் விழா அமைப்பாளர்களுக்கு 10,000 டொலா்களும் அவசரகால விதிகளை மதிக்காமல் அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு 750 டொலா்களும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக ஒன்ராறியோ மாகாணம் பெரும் அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளது. இந்நிலையில் மாகாணத்தில் மீண்டும் தொற்று நோய் அதிகரிப்பதற்கு ஏதுவாக நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என முதல்வர் டக் போர்ட் கூறினார்.

புதிய விதிகள் ஒட்டாவா, ரொராண்டோ மற்றும் பீல் பிராந்தியத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 12:01 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஒன்ராறியோ மாகாணத்தில் கொரேனா வைரஸ் தொற்று நோய் குறைந்து வந்ததையடுத்து மாகாணம் முழுவதும் கட்டுப்பாடுகள் மூன்றாம் கட்டமாகத் தளா்த்தப்பட்டன.

இதன்படி உட்புறங்களில் 50 பேரும் வெளிப்புற திறந்த வெளியில் 100 பேரும் ஒன்றுகூட அனுமதிக்கப்பட்டது.

எனினும் மாகாணத்தில் தொற்றுநோய் மீண்டும் அதிகரித்துவரும் 3 பிராந்தியங்களிலும் மீண்டும் அதிகளவானவா்கள் ஒன்றுகூடக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த 3 பிராந்தியங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் முன்னர் அறிவிக்கப்பட்ட தளா்வுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ள வேண்டும் என மாகாண தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாகாணத்தில் தற்போதுள்ள நிலையில் எந்தப் பகுதிகளிலும் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவது விவேகமான செயற்பாடாக இருக்காது எனவும் அவா் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE